தெற்கில் பாடசாலைக்கு அருகில் 220 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!
தென்னிலங்கையில் பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் ஹொரணை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரான இளைஞர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர்ஆவார்.
சந்தேகநபரான இளைஞரிடமிருந்து 220 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
