யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பெரும்பான்மை இன மாணவன் ஒருவர் ஹசீஸ் போதைப்பொருளுடன் சிக்கினார்.

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று யாழ். கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊவா, பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மேற்படி மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிகிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்திய வேளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சம்வம் தொடர்பான மேலதிக விசாராணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.