போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 865 பேர் வசமாகச் சிக்கினார்கள்!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தப் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது நாடளாவிய ரீதியில் 867 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, 20 கிலோ 616 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 44 கிலோ 508 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 6 கிலோ 914 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 28 ஆயிரத்து 225 கஞ்சா செடிகளும், 77 கிராம் குஷ் போதைப்பொருளும், 28 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 472 மாத்திரைகளும், 209 மதனமோதக மாத்திரைகளும், 4 கிலோ 484 கிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.