மாவீரர் வாரத்தின் முதல் நாளில் கொழும்பில் மாவீரருக்கு ரவிகரன் எம்.பி. அஞ்சலி!

மாவீரர் வாரம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல் நாளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாகத் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

அந்தவகையில் மாவீரர் துயிலும் இல்லத்தைத் தாங்கிய திருவுருவப் படத்துக்குச் சுடரேற்றி, மலர் தூவி மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளைச் செலுத்தினார்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கென தற்போது ரவிகரன் எம்.பி. கொழும்பில் தங்கியுள்ள நிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பிலேயே அவரால் இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.