அனர்த்தத்தால் இடைநிறுத்தப்பட்ட ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைகளை ஜனவரியில் நடத்தத் தீர்மானம்.
இலங்கையில் அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இன்று கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிவித்துள்ளார்.
எனினும், ஜனவரி மாதம் பரீட்சை நடைபெறும் திகதிகளை அவர் அறிவிக்கவில்லை.
