தெஹிவளையில் இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை!

தெஹிவளையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தெஹிவளை “ஏக்வாடஸ்” விளையாட்டரங்குக்கு அருகில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.