தமிழரசு – சங்கு யாழில் சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களுக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் – மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றது.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், சி.ரவீந்திரா மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் பொதுச்செயலாளர் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
