மண்சரிவு அபாய எச்சரிக்கை எட்டு மாவட்டங்களுக்கு நீடிப்பு.
இலங்கையில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதுளை, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த மண்சரிவு அபாய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
