பேரனர்த்த நிவாரணப் பணிகளில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்.
பேரனர்த்த நிவாரணப் பணிகளில் அரச அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அரசு அடியோடு நிராகரித்துள்ளது.
“அரச அதிகாரிகளுக்கு அரச தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. அரச ஊழியர்களுக்குச் சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“தேசிய மக்கள் சக்தி அரசுக்கு சர்வதேச தொடர்பு இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பான முறையில் உறவு பேணப்பட்டு வருகின்றது.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற நிதி முறையாகப் பயன்படுத்தப்படாததால் சர்வதேசம் நம்பிக்கை இழந்து இருந்தது.
ஆனால் எமது நிர்வாகப் பொறிமுறை மீது சர்வதேசத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது.” – என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
