ஆபத்தான முறையில் மோ. சைக்கிள்களை செலுத்திய 18 இளைஞர்கள் மடக்கிப் பிடிப்பு!
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோக்களை ஓட்டிய 18 இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹரகம – பன்னிப்பிட்டிய ஹைலெவல் வீதியில் நேற்று இவர்கள் மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண பந்தயம் கட்டும் போது மேற்படி இளைஞர்கள் இதைச் செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இதற்காகப் பயன்படுத்தப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஓட்டோவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
