முன்னாள் அமைச்சர் ரத்நாயக்கவுக்குப் பிணை.
பண மோசடிச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவைக் கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ்.போதரகம இன்று பிணையில் விடுவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு, ரூ. 57.3 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத வருமானம் ஈட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரத்நாயக்கவைக் கைது செய்திருந்தது.
இலஞ்ச சட்டத்தின் பிரிவு 23(ஏ)(1) இன் கீழ் இலஞ்ச ஆணைக்குழுவின் சொத்து விசாரணைப் பிரிவால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சி.பி. ரத்நாயக்க தலா ரூ. 2 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
