வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்
யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தமிழ்க் கட்சிகள் சகலவற்றினதும் ஆதரவுடன் 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்று வியாழக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் சபயில் சமர்ப்பிக்கப்பட்டடு விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதங்களின் இறுதியில் தவிசாளரினால் வாக்கெடுப்பு கோரப்பட்டபோது தமிழ்க் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் முழுமையாக ஆதரவு வாக்களித்தனர்.
அதன்படி 25 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 9 பேரும் எதிர்த்து வாக்களித்தனர்.

இதையடுத்த வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட வெற்றியை உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.
