₹3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக வெறிச்செயல்: பெற்ற தந்தையை பாம்பை ஏவி கொன்ற மகன்கள்!

இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற தந்தையை மகன்களே பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரது மகன்களே தந்தையை கொலை செய்த சம்பவம் தமிழகத்தின் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.

காப்பீட்டு பணம்
பாடசாலை ஒன்றில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் 56 வயதுடைய ஆண் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மகன்கள் இருவரும் கட்டு விரியன் பாம்பை விட்டுத் தந்தையைக் கடிக்க வைத்தது வெளிவந்துள்ளது.

பொலிஸாரின் விசாரணைகளின் போது, இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் காப்பீட்டு பணத்திற்காக அவர்கள் இந்த கொடூர செயலை மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகன்கள் இருவர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.