ஜனவரி மாதமே ரில்வின் இந்தியா பயணம்?
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும் ஜனவரி மாதமே இந்தியா செல்லவுள்ளார் என்று அறியவருகின்றது.
முன்னதாக அவர் நவம்பர் மாத இறுதியில் இந்தியா செல்வதாக இருந்தது. ஆனால், டித்வா சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரிடரால் அவரின் பயணம் பிற்போடப்பட்டது.
இந்தநிலையில் ரில்வின் சில்வா ஜனவரி மாதம் இந்தியா செல்வார் என்று கூறப்படுகின்றது.
இதன்போது, உயர்மட்ட சந்திப்புகளில் பங்கேற்கும் அவர், மாவட்ட சபைகள் முறைமை அல்லது மக்களால் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று அதிகார ஆளுநர் முறைமை ஊடாக மாகாண சபை முறைமையைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் ஆலோசனை குறித்து கலந்துரையாடுவார் என்று கூறப்படுகின்றது.
