அம்பலாங்கொடையில் ஒருவர் சுட்டுக்கொலை!

அம்பலாங்கொடையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

அம்பலாங்கொடை பகுதியில் உள்ள கடையின் ஒன்றின் முகாமையாளரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்றனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இரண்டு குழுக்களுக்கிடையிலான தகராறினால் இடம்பெற்றது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்குத் துப்பாக்கிதாரியால் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பலாங்கொடை குருந்துவத்த – அந்ததோல வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்த அம்பலாங்கொடை பொலிஸார், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.