அர்ச்சுனாவுக்குப் பிடியாணை.
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது.
அதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து நீதிவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
