பொலிஸ் அதிரடி வேட்டையில் நாடு முழுவதிலும் பலர் கைது!
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 29 ஆயிரத்து 727 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 597 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 25 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 218 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 136 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 136 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 36 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்துக் குற்றங்களுக்காக 4 ஆயிரத்து 795 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
