தனியார் பஸ் மோதி பெண் ஒருவர் மரணம்!

இந்த விபத்து எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – அவிசாவளை வீதியின் மஹிங்கொட பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரியில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் எதிர்த்திசையில் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் குழந்தையொன்றும் பலத்த காயமடைந்து, எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் 30 வயதுடைய பெண் எனவும், அவர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள எஹெலியகொட பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.