கடலில் மூழ்கி வைத்தியர் மரணம்!

கடலில் மூழ்கி வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரிஸ்ஸ கடலில் நேற்று நீராடிக் கொண்டிருந்த வைத்தியரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வெலிகம – வலான பகுதியில் உள்ள வைத்தியசாலையில் பணியாற்றும் 49 வயதுடைய தலைமை வைத்தியரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி வைத்தியர் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டார். பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அவரை மீட்டு மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வைத்தியர் ஒரு மாதத்துக்கு முன்பே மாத்தறை வைத்தியசாலையில் பணிபுரியத் தொடங்கினார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.