மோட்டார் சைக்கிள் பந்தயம்: 7 இளைஞர்கள் மடக்கிப் பிடிப்பு.

பணத்துக்காக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாணந்துறை வடக்கு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மொரட்டுவை, ஏகொட-உயன மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18, 19, 20, 21 மற்றும் 22 வயதுடையவர்கள் எனப் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பழைய காலி வீதியில், இரவில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன எனவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகின்றது எனவும் அப்பகுதி மக்கள் அளித்த முறைப்பாட்டையடுத்து, பாணந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பழைய காலி வீதியில் உள்ள ஜூபிலி சந்தியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, 4 மோட்டார் சைக்கிள்களுடன் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் பந்தயங்களின் போது அடையாளம் காணும் வகையில் சைலன்சர்கள் வெட்டப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன எனவும், இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.