இரத்தக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!

இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம், மிஹிந்தலை – புதுக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.