யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டார்.இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர்.நாமல் ராஜபக்

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த உதைபந்தாட்ட மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று காலை யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தினை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ச வடக்கில் சிறந்த ஒரு உதைபந்தாட்ட மைதானம் ஆக தற்போது யாழ் துரையப்பா மைதானம் திகழ்கின்றது. எனினும் எதிர்வரும் ஆண்டுகளுக்குள் குறித்த மைதானமானது சர்வதேச தரத்தினை ஒத்த வகையில் குறித்த மைதானத்தை நாங்கள் புனரமைக்கவுள்ளோம். அத்தோடு இலங்கை பூராகவும் உதைபந்தாட்ட கழகங்களை நாங்கள் புதிதாக ஆரம்பிக்க உள்ளோம். அதேபோல யாழ்ப்பாணத்திலும் புதிதாக கழகம் உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு துரையப்பா விளையாட்டு மைதானத்தில் உள்ளக அரங்கில் ஜிம் சென்டர் ஒன்றையும் விரைவில் ஆரம்பிப்பதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம். அதனையும் தயார் படுத்துவதன் மூலம் ஏனைய மாவட்டங்களை போல வடக்கு இளைஞர்களும் தமது உதைபந்தாட்ட திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த அரசு குறித்த முயற்சிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் இ. ஆனல்ட், கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.