3 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது! – ஜனவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.45 மணியளவில் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேற்படி 3 மீனவர்களும் கரையோரப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் பாரப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், முற்பகல் 11 மணியளவில் ஊகாவற்றுறை நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.