கொழும்பு மாநகர சபையில் என்.பி.பியின் பாதீடு வெற்றி!

தெற்கு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாதீடு மீதான வாக்கெடுப்பின்போது ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய மேலதிக 2 வாக்குகளால் பாதீடு நிறைவேறியது.

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள கொழும்பு மாநகர சபையின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

இதன்போது வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய மேலதிக 3 வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. இது தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ரீதியிலான பின்னடைவு எனக் கருதப்பட்டது.

இந்நிலையிலேயே வரவு – செலவுத் திட்டம் இன்று 2ஆவது தடவையாக முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் நலன் மிக்க பாதீட்டுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கொழும்பு மாநகர சபை மேயர் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.