தெஹிவளையில் அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
தெஹிவளையில் அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தெஹிவளைப் பகுதியில் உள்ள ஒரு பணியிடத்தின் முன் நேற்று இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தாக்குதலின் விளைவாக மேற்படி நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தெஹிவளை, சஞ்சயபுர – மருத்துவ வீதியைச் சேர்ந்த நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்கிஸை நீதிவான் கீத்மா பெர்னாண்டோ இந்த விவகாரம் குறித்து நீதிவான் விசாரணையை நடத்தியுள்ளார்.
