தேர்தல் கொள்கை அறிக்கையை சஜித் , ஜனாதிபதியிடம் ஒப்படைப்பார்

ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டை எவ்வாறு கட்டியமைப்பது என்பது குறித்த கொள்கை அறிக்கையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த வாரம் கொள்கை அறிக்கையை நாட்டிற்கு வழங்கவுள்ளார்.

அதன் நகலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் வழங்க உள்ளதாக தெரிய வருகிறது.

இந்த கொள்கை அறிக்கை கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Comments are closed.