வத்தளை திக்கோவிட கடற்பரப்பில் நீராட சென்ற நால்வர் பலி

வத்தளை திக்கோவிட கடற்பரப்பிற்கு நீராடச்சென்ற 5 பேரில் நால்வர் பலியாகியுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவத்தினர், பிரதேச மக்களின் உதவியுடன் 4 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரை மீட்டு றாகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

எனினும் பெண் ஒருவர் அதிதீவிர பிரிவில் தொடர்ந்தும் றாகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 16 வயதுடைய சிறுமி உட்பட 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளார். மற்றைய இரு பெண்களும் 20 மற்றும் 30 வயதினை உடையவர்கள் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த நால்வரினதும் சடலங்கள் றாகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments are closed.