இந்தியாவில் இருந்து புறாக்களைக் கடத்தி வந்த நெடுந்தீவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சிக்கினர்!

இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி, நெடுந்தீவுக்குப் படகில் கொண்டு வந்த நெடுந்தீவைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் இந்தியாவிலிருந்து புறாக்களை அடைத்து, அவற்றை நெடுந்தீவுக்குக் கடத்தி வந்த நிலையில், நெடுந்தீவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் கடத்தி வந்த புறாக்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.