சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் நாவற்குழியில் கோர விபத்து! இரு இளைஞர்கள் உயிரிழப்பு!! – தைப்பொங்கல் நாளில் துயரம்.
கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்த டிப்பர் வாகனம் ஒன்று, நாவற்குழிப் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
டிப்பர் வாகனம் பாதையை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் யாழ்ப்பாணம் – அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.





ஒருவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், மற்றையவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
