வடமராட்சியில் 12 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
யாழ். வடமராட்சி – திக்கம் பகுதியில் 12 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று மாலை இந்தக் கஞ்சா பொதிகள் பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர் ஒருவர் தப்பியோடிய நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
