இரண்டு கிலோ கஞ்சா இளவாலையில் மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் இரண்டு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இளவாலை விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று மாலை இந்தக் கஞ்சாப் பொதி மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.