‘பொங்கு தமிழ்’ பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ‘பொங்கு தமிழ்’ பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள் நேற்று நினைவுகூரப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்துக்குள் உள்ள ‘பொங்கு தமிழ்’ நினைவுத் தூபி முன் ஒன்றுகூடி நினைவுகூர்ந்தனர்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ‘பொங்கு தமிழ்’ பிரகடனம் அன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
