எல்லை தாண்டி மீன்பிடித்த 7 இந்திய மீனவர்களுக்கும் பெப்ரவரி 3 வரை மறியல்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகில் நேற்று மாலை எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் ஏழு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மேற்படி மீனவர்கள் பயணித்த இரண்டு மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

எல்லை தாண்டிய மீன்பிடிச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையே தொடர்ச்சியாகப் பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.