எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? – நாடு திரும்பிய கையோடு பிரதமர் கேள்வி.

“எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா?”

இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் உரையாற்றும்போது கேள்வி எழுப்பினார்.

“எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்றுதானே சுவிஸில் இருந்து நான் இன்று அவசரமாக வந்தேன். அந்தப் பிரேரணை எங்கே?” – என்றும் அவர் சிரித்தபடியே வினா தொடுத்தார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இன்று பிற்பகல் நாடு திரும்பிய கையோடு நாடாளுமன்றம் வந்தார் பிரதமர்.

சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு, எதிரணிக்கு உரிய பதிலடி கொடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.