இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய கோர விபத்தில் குடும்பஸ்தர் மரணம்!
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் கேகாலை – அவிசாவளை வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கேகாலை திசையில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், அவிசாவளை திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவர் படுகாயமடைந்து கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
அவர் வெளிநாடு செல்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
