உரிய நேரத்தில் பிரதமருக்கு எதிரான பிரேரணை வரும்! – சபாநாயகருக்கு எதிரான பிரேரணை குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என்கின்றது எதிரணி.
“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் உரிய நேரத்தில் வரும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அனைத்து எதிரணிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமை மீறல், பாரபட்சம் உட்பட சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே பிரேரணை முன்வைப்பது குறித்து கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசின் தேவைக்கேற்ப பிரேரணைகளைக் கொண்டுவருவதற்கு தாம் தயாரில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
