கொட்டும் மழைக்கு மத்தியிலும் திஸ்ஸ விகாரைக்கு எதிராக தையிட்டியில் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படும் திஸ்ஸ விகாரைக்கு எதிராக, கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அங்கு அமைக்கப்பட்ட விகாரையை அகற்றி, அந்த காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டு இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

இதில் அரசியல்வாதிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.