நாளை கரிநாளுக்கு தமிழரசும் ஆதரவு!

நாளை வரும் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாக அனுஷ்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னுடைய முழு ஆதரவை வழங்கியிருக்கின்றது.

இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தமது கட்சியும் முழு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.