இனவாதமற்ற அரசியல் பயணம்: என்.பி.பி. அரசுக்கு வாசு பாராட்டு.
“இனவாதம் அற்ற பயணத்தை தேசிய மக்கள் சக்தி அரசு ஆரம்பித்திருப்பதே சிறப்பான ஆரம்பமாகும்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும்.
ஏனைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் இது மாறுபட்ட அரசாகும். பிரபு வர்க்கத்தினர் அல்லர். சாதாரண மக்களே ஆட்சியில் உள்ளனர்.
எனவே, ஏற்பட்ட மாற்றத்தைச் சிறந்த மாற்றமாக மாற்றுவதற்கு ஒன்றிணைவோம்.” – என்றார்.
