இம்மாத இறுதியில் அநுர இந்தியாவுக்குப் பயணம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த மாதம் இறுதியில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
புதுடில்லியில் நடைபெறவுள்ள உச்சிமாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.
