கெஹலியவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைதுசெ ய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்து.

ஏற்கனவே கெஹலிய ரம்புக்வெலவின் மனைவி மற்றும் ஏனைய மகள்கள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மூத்த மகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.