அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
