மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் மரணம்! – கண்டியில் பெரும் சோகம்.

மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் கண்டி, கலஹா – நவனெலிய பகுதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 46 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.

இருவரும் கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்தபோது தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டமையால் மின்சாரம் தாக்கியுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.