ரயிலில் மோதி ஒருவர் மரணம்.

இரவுநேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை – கஹவ ரயில் நிலையத்துக்கு அருகில் மருதானையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த இரவுநேர தபால் ரயிலில் மோதியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.