திருமலை கடற்கரையில் புத்தர் சிலை விவகாரம்: இன்று வழக்கு நாளில் அங்கு கவனவீர்ப்பு முஸ்தீபு!
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட கட்டுமானம் அமைந்துள்ள திருகோணமலை பிரதான கடற்கரை பகுதிக்கு முன்பாக கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளி இடங்களில் இருந்து பலர் வருகைதரவுள்ளனர் என்வும் தெரியவருகின்றது.
இதேவேளை இன்று திங்கட்கிழமை மேற்படி கடற்கரையோர சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் மீளவும் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
