தேயிலை மலையில் மக்களுடன் ஜனாதிபதி – சம்பள உயர்வு மகிழ்ச்சியில் திளைத்த தொழிலாளர்கள்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையகப் பெருந்தோட்டப் பகுதிக்குச் சென்று, தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
தமக்குரிய சம்பள உயர்வு நேற்று கிடைக்கப் பெற்றதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையிலேயே அவர்களை ஜனாதிபதி இன்று நேரில் சந்தித்தார்.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்றிட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று நுவரெலியா சென்றார்.
அங்கு செல்லும் வழியிலேயே தொழிலாளர்களைச் சந்தித்து, சிநேகர்பூர்வமாகக் கலந்துரையாடினார்.
தமக்குச் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்களை, தேயிலை மலைக்கே சென்று ஜனாதிபதி சந்தித்தமையைப் பலரும் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.






