பெற்றத் தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகள்! – ஆந்திராவில் அரங்கேறிய சொத்து வெறி கொடூரம்

ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்ற தாயை மகளே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சொந்த வீட்டை எழுதித் தர மறுத்ததால் தாயை கொன்று வீட்டை கைப்பற்ற நினைத்ததாக மகள் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பொலிஸார் சென்று விசாரித்ததில், அவரது மகள் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தது தெரியவந்தது.

வாக்குமூலம்
இதையடுத்து லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் தாயை எரித்துக்கொன்றது தெரியவந்தது.

குறித்த பெண் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே, எனது தந்தை தற்கொலை செய்துகொண்டார். எனது தாய் தொடர்ந்து தவறான நடத்தையில் இருந்து வந்தார்.

இதனால் எனது அண்ணனும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தாயின் நடத்தை காரணமாக எனக்கு இதுவரை 4 முறை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாய் வசித்துவந்த வீட்டை, தனது பெயருக்கு எழுதிக்கேட்டு இருக்கிறார் லட்சுமி. வீட்டை எழுதிக் கொடுக்க மறுத்ததால் ரமாதேவிக்கும், லட்சுமிக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இருக்கிறார் லட்சுமி. பொலிஸாரின் விசாரணையில் இந்த தகவலை வாக்குமூலமாகவும் லட்சுமி தெரிவித்திருக்கிறார்

Leave A Reply

Your email address will not be published.