கோப்பாயில் ஒருவர் அடித்துப் படுகொலை – பாதை விவகாரமே விபரீதமானது.
யாழ். கோப்பாய் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோதலில் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் ஆசிரிய கலாசாலை வீதியில் வசிக்கும் 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போக்குவரத்துப் பாதை தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
