இனப்பிரச்சினைக்கு அரசமைப்பின் ஊடாக நிரந்தர தீர்வு உறுதி! – பிரதி அமைச்சர் பிரதீப் தெரிவிப்பு.

இலங்கையில் நீண்ட காலமாக நிலவும் இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பு ஊடாக நிரந்தர தீர்வு காணப்படும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அரசமைப்பு உருவாக்கப் பணிகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார். இதன்போதே, அரசமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் பிரச்சினைகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படவில்லை. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அநுரவின் அரசில் தமிழர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.

இனவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே எமது கனவு. அந்த இலக்கை நோக்கி நாங்கள் நகர்ந்து வருகின்றோம்.

அரசமைப்புப் பணிகளுக்கு அனைத்துத் தரப்புகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.