மின்சாரம் தாக்கி வங்கி ஊழியர் பலி! – மின்விசிறியைத் திருத்த முற்பட்டபோது நேர்ந்த விபரீதம்.

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் நேற்று இரவு மின்சாரம் தாக்கியதில் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் நீர்கொழும்பிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், தனது வேலை நிமித்தம் நீர்கொழும்பு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்துள்ளார். நேற்று இரவு அவர் தங்கியிருந்த வீட்டில் மின்சாரம் தாக்கியதில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

அந்த இளைஞர், பழுதடைந்த மின்விசிறியைத் திருத்த முற்பட்டபோதே மின்சாரம் தாக்கியுள்ளது.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.